மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் C.ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றதும் முதல் கையெழுத்துகள்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக C.ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்ற உடன், மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி மூன்று முக்கிய கோப்புகளில் விஜய் அவர்கள் தனது முதல் கையெழுத்தை பதிவு செய்தார்.
🖊️ முதல் கையெழுத்து – ₹200 யூனிட் இலவச மின்சாரம்
வீட்டு மின்சாரச் செலவை குறைக்கும் வகையில், மாதம் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டார்.
🖊️ இரண்டாவது கையெழுத்து – பெண்களின் பாதுகாப்புக்கான சிறப்பு அதிரடிப்படை
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவாகக் கட்டுப்படுத்த, பெண்களின் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.
🖊️ மூன்றாவது கையெழுத்து – போதைப்பொருள் முழுமையான ஒழிப்பு நடவடிக்கை
தமிழகத்தில் போதைப்பொருள் பரவலை முற்றிலுமாக ஒழிக்க, போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் கோப்பில் கையெழுத்திட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சமூக நலனை முன்னிலைப்படுத்தும் இந்த முதல் மூன்று முடிவுகள், புதிய ஆட்சியின் திசையை தெளிவாக காட்டுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *